Skip to content

karkakasadaratrust/Thiruvarutpayan

Folders and files

NameName
Last commit message
Last commit date

Latest commit

 

History

8 Commits
 
 
 
 

Repository files navigation

Thiruvarutpayan

காப்பு 0
1. பதிமுது நிலை 1 2 3 4 5 6 7 8 9 10
2. உயிரவை நிலை 11 12 13 14 15 16 17 18 19 20
3. இருண்மல நிலை 21 22 23 24 25 26 27 28 29 30
4. அருளது நிலை 31 32 33 34 35 36 37 38 39 40
5. அருளுருநிலை 41 42 43 44 45 46 47 48 49 50
6. அறியுநெறி 51 52 53 54 55 56 57 58 59 60
7. உயிர் விளக்கம் 61 62 63 64 65 66 67 68 69 70
8. ஐந்தெழுத்து அருள் நிலை 71 72 73 74 75 76 77 78 79 80
9. ஐந்தெழுத்து அருள் நிலை 81 82 83 84 85 86 87 88 89 90
10. அணைந்தோர் தன்மை 91 92 93 94 95 96 97 98 99 100
0 காப்பு
நற்குஞ்சரக் கன்று நண்ணில் கலைஞானம்
கற்குஞ் சரக்கன்று காண்.
  1. பதிமுது நிலை
1 கடவுளின் இயல்பு
அகர உயிர்போல் அறிவாகி எங்கும்
நிகரில் இறை நிற்கும் நிறைந்து.
2 சிவசத்தியின் தன்மை
தன் நிலைமை மன் உயிர்கள் சாரத் தரும்சத்தி
பின்னம் இலான் எங்கள் பிரான்.
3 சிவத்தின் பெருமை
பெருமைக்கும் நுண்மைக்கும் பேர்அருட்கும் பேற்றின்
அருமைக்கும் ஒப்புஇன்மை யான்.
4 சிவத்தின் அருட் செயல்கள்
ஆக்கிஎவையும் அளித்து ஆசுடன் அடங்கப்
போக்கு அவன் போகாப் புகல்.
5 அருட்செயல்களை நடத்தும் திருமேனிகள்
அருவம் உருவம் அறிஞர்க்கு அறிவாம்
உருவம் உடையான் உளன்.
6 அத்திருமேனிகளைத் தோற்றுவிப்பவர் அவரே
பல்ஆர் உயிர் உணரும் பான்மைஎன மேல்ஒருவன்
இல்லாதான் எங்கள் இறை.
7 அருட்செயல்களின் பயன் ஆன்மாவில் சிவம் பிரகாசித்தல்
ஆனா அறிவாய் அகலான் அடியவர்க்கு
வான்நாடர் காணாத மன்.
8 சிவத்தின் வியாபகம்
எங்கும் எவையும் எரி உறு நீர்போல் ஏகம்
தங்கும்அவன் தானே தனி.
9 திருவருளை நுகரும் வழி
நலம்இலன் நண்ணார்க்கு நண்ணினர்க்கு நல்லன்
சலம்இலன் பேர் சங்கரன்.
10 அவ்வழியில் ஆன்மாவைச் செலுத்துதல்
உன்னும்உளது ஐயம்இலது உணர்வாய் ஓவாது
மன்னுபவம் தீர்க்கும் மருந்து.
  1. உயிரவை நிலை
11 ஆன்மாக்கள் எண்ணில்லாதன
பிறந்தநாள் மேலும் பிறக்குநாள் போலும்
துறந்தோர் துறப்போர் தொகை.
12 மூவகை ஆன்மாக்கள்
திரிமலத்தார் ஒன்றுஅதனில் சென்றார்கள் அன்றி
ஒரு மலத்தாராயும் உளர்.
13 மூவகை ஆன்மாக்களின் வேறுபாடு
மூன்றுதிறத்து உள்ளாரும் மூலமலத்து உள்ளார்கள்
தோன்றலர் தொத்துஉள்ளார் துணை.
14 ஆன்மா வலியற்றது
கண்டவற்றை நாளும் கனவில் கலங்கியிடும்
திண்திறலுக்கு என்னோ செயல்?.
15 ஆன்மா அறிவிக்க அறிவது
பொறியின்றி ஒன்றும் புணராத புந்திக்கு
அறிவுஎன்ற பேர்நன்று அற.
16 ஆன்மா இயல்பாக அறிவுப்பொருள்
ஒளியும் இருளும் உலகும் அலர்கண்
தெளிவுஇல் எனில்என் செய.
17 ஆன்மா சதசத்து
சத்துஅசத்தைச் சாராது அசத்துஅறியாது அங்கண்இவை
உற்ற சதசத்தாம் உயிர்.
18 ஆன்மா தன்வயமில்லாதது
இருளில் இருளாகி எல்இடத்தில் எல்ஆம்
பொருள்கள் இலதோ புவி.
19 ஆன்மா சிவத்தைக் காணாமைக்குக் காரணம்
ஊமன்கண் போல ஒளியும் மிகஇருளே
ஆம்மன் கண் காணாதவை.
20 ஆன்மா அருளைப் பெற முயலல் வேண்டும்
அன்றளவும் ஆற்றும் உயிர்அந்தோ அருள்தெரிவது
என்று? அளவொன்றுஇல்லா இடர்.
  1. இருண்மல நிலை
21 முப்பொருளும் இன்ப துன்பமும் உள்ள பொருள்கள்
துன்றும் பவத்துயரும் இன்பும் துணைப்பொருளும்
இன்றுஎன்பது எவ்வாறும் இல்.
22 ஆணவத்தின் உண்மை அனுமானத்தால் துணியப்படும்
இருளானது அன்றி இலதுஎவையும் ஏகப்
பொருளாகி நிற்கும் பொருள் .
23 ஆணவம் இருளிற் கொடியது
ஒருபொருளும் காட்டாது இருள்உருவம் காட்டும்
இருபொருளும் காட்டாது இது.
24 ஆணவம் அநாதியாய் ஆன்மாவோடு உள்ளது
அன்றுஅளவி உள்ளொளியோடு ஆவிஇடை அடங்கி
இன்றுஅளவும் நின்றது இருள்.
25 ஆணவம் அநந்த சத்திகளை உடையது
பலரைப்புணர்ந்தும் இருள்பாவைக்கு உண்டு என்றும்
கணவர்க்கும் தோன்றாத கற்பு.
26 ஆணவம் மெய்யுணர்வைத் தடுப்பது
பன்மொழிகள்என்? உணரும் பான்மை தெரியாத
தன்மை இருளார் தந்தது.
27 ஆணவம் ஆன்மாவின் குணமன்று
இருள்இன்றேல் துன்புஏன்? உயிர்இயல்பேல் போக்கும்
பொருள்உண்டேல் ஒன்றாகப் போம்.
28 ஆணவம் அநாதி
ஆசுஆதியேல் அணைவ காரணம்என்? முத்திநிலை
பேசாது அகவும் பிணி.
29 ஆணவத்தைக் கெடுக்கும் ஒரு கருவி மாயை
ஒன்று மிகினும் ஒளிகவராதேல் உள்ளம்
என்றும் அகலாது இருள்.
30 மாயை கன்மங்களின் இயல்பு
விடிவுஆம் அளவும் விளக்குஅனைய மாயை
வடிவுஆதி கன்மத்து வந்து.
  1. அருளது நிலை
31 அருளின் பெருமை
அருளில் பெரியது அகிலத்துஇல் வேண்டும்
பொருளில் தலைஇலது போல் .
32 திருவருளின் பயன்
பெருக்க நுகரவினை பேரொளியாக எங்கும்
அருக்கன் என நிற்கும் அருள்.
33 அருளின்றி அறிவு பெறப்படாது
ஊன்அறியாது என்றும் உயிர்அறியாது ஒன்றும்இது
தான்அறியாது ஆர்அறிவார்? தான்.
34 ஆன்மாக்கள் அருளை அறியாமைக்குக் காரணம்
பால்ஆழி மீன்ஆளும் பான்மைத்துஅருள் உயிர்கள்
மால்ஆழி ஆழும் மறித்து .
35 இதுவுமது
அணுகுதுணை அறியா ஆற்றோனில் ஐந்தின்
உணர்வை உணராது உயிர்.
36 இதுவுமது
தரையை அறியாது தாமே திரிவார்
புரையை உணரா புவி.
37 அருளை நாடுகிறவன் எளிதில் அறிவன்
மலைகெடுத்தோர் மண்கெடுத்தோர் வான்கெடுத்தோர் ஞானம்
தலைகெடுத்தோர் தற்கேடர் தாம்.
38 இதுவுமது
வெள்ளத்துள் நாவற்றி எங்கும் விடிந்துஇருளாம்
கள்ளத்து இறைவர் கடன்.
39 அருளை அறியும் வழி
பரப்புஅமைந்து கேண்மின் இதுபாற்கலன்மேல் பூஞை
கரப்புஅருந்த நாடும் கடன்.
40 திருவருளை அறியாதார் சிறுமை
இற்றைவரை இயைந்தும் ஏதும்பழக்கம் இலா
வெற்றுஉயிர்க்கு வீடு மிகை.
  1. அருளுருநிலை
41 குருவடிவாய் வருவது திருவருள்
அறியாமை உள்நின்று அளித்ததே காணும்
குறிஆகி நீங்காத கோ.
42 அருளே ஆணவத்தைப் போக்கத்தக்கது
அகத்துஉறுநோய்க்கு உள்ளினர் அன்றி அதனைச்
சகத்தவரும் காண்பரோ தான்.
43 குருவைச் சிஷ்யனன்றிப் பிறரறியார்
அருளா வகையால் அருள்புரிய வந்த
பொருளாஆர் அறிவா புவி?
44 பக்குவமில்லாதார் அறியாமைக்குக் காரணம்
பொய்இருண்ட சிந்தைப் பொறிஇலார் போதமாம்
மெய்இரண்டும் காணார் மிக.
45 சகலருக்குக் குருவாய் வருதலின் நோக்கம்
பார்வைஎன மாக்களை முன்பற்றிப் பிடித்தற்காம்
போர்வைஎனக் காணா புவி.
46 குரு சாத்திர தீட்சைக்கு இன்றியமையாதவர்
எமக்குஎன்? எவனுக்கு எவைதெரியும்? அவ்வ
தமக்குஅவனை வேண்டத் தவிர்.
47 நயன தீட்சை
விடம்நகுலம் மேவினும் மெய்ப்பாவகனின் மீளும்
கடனில் இருள்போவது இவன்கண்.
48 மூவகை ஆன்மாக்களுக்கும் அருள்செய்யும் முறை
அகலத்துஅரும் அருளை ஆக்கும் வினைநீக்கும்
சகலர்க்குவந்து அருளும் தான்.
49 சிவபெருமானே குருவாதல் வேண்டும்
ஆர்அறிவார்? எல்லாம் அகன்ற நெறிஅருளும்
பேரறிவான் வாராத பின்.
50 இதுவுமது
ஞானம் இவன்ஒழிய நண்ணியிடும் நற்கல்அனல்
பானு ஒழியப் படின்.
  1. அறியுநெறி
51 இருவினை ஒப்பும் சத்தி நிபாதமும்
நீடும் இருவினைகள் நேர்ஆக நேர்ஆதல்
கூடும் இறைசத்தி கொளல்.
52 ஆறு பொருள்கள் அநாதி
ஏகன்அநேகன் இருள்கருமம் மாயை இரண்டு
ஆகஇவை ஆறு ஆதிஇல்.
53 ஆறு பொருள்களுக்கும் உள்ள தொடர்பு
செய்வானும் செய்வினையும் சேர்பயனும் சேர்ப்பவனும்
உய்வான்உளன் என்று உணர்.
54 கடவுள் ஆன்மாவுக்கு உயிராய் நிற்றல்
ஊன்உயிரால் வாழும்ஒருமைத்தே ஊனொடு உயிர்
தான்உணர்வோடு ஒன்றாம் தரம்.
55 கடவுள் உயிருக்கு உயிராய் நின்று நடத்தும் முறைமை
தன்னிறமும் பன்னிறமும் தானாம்கல்தன்மை தரும்
பொன்னிறம்போல் மன்னிறம் இப்பூ.
56 மெய்ப்பொருளைக் காண்பதற்கு ஞானம் வேண்டும்
கண்டுஒல்லை காணும்நெறி கண்உயிர் நாப்பண்ஒளி
உண்டுஇல்லை அல்லாது ஒளி .
57 ஆன்மா தன் செயலைச் சிவன் செயலாகக் கருதவேண்டும்
புன்செயலின் ஓடும் புலன்செயல்போல் நின்செயலை
மன் செயலதாக மதி.
58 ஞானத்தைக் காணும் முறைமை
ஓராதே ஒன்றையும் உற்றுஉன்னாதே நீமுந்திப்
பாராதே பார்த்ததனைப் பார்.
59 ஞானத்தை அணையும் முறைமை
களியே மிகுபுலனாக் கருதி ஞான
ஒளியே ஒளியா ஒளி.
60 பிறபொருளைக் கருதாமல் ஞானவசமாய் நிற்றல்
கண்டபடியே கண்டு காணாமை காணாமை
கொண்டபடியே கொண்டு இரு.
  1. உயிர் விளக்கம்
61 அருளை அடைதற்கு ஏது
தூநிழல் ஆர்தற்கு ஆரும்சொல்லார் தொகும்இதுபோல்
தான்அதுவாய் நிற்கும் தரம்.
62 ஆன்மா அருளை அறியும் காலம்
தித்திக்கும் பால்தானும் கைக்கும் திருந்திடும்நா
பித்தத்தின் தான்தவிர்ந்த பின்.
63 ஆன்மா அருளைத் தானாகக் காணமாட்டாது
காண்பான் ஒளிஇருளில் காட்டிடவும் தான்கண்ட
வீண்பாவம் எந்நாள் விழும்.
64 திருவருள் ஆணவத்தை ஒத்திருக்கும் வகை
ஒளியும் இருளும் ஒருமைத்துப் பன்மை
தெளிவு தெளியார் செயல்.
65 திருவருளை அடைந்தோர்க்குக் கடவுள் வெளிப் படுதல் எளிது
கிடைக்கத் தகுமோ நற்கேண்மையார்க்கு அல்லால்
எடுத்துச் சுமப்பானை இன்று.
66 திருவருளைச் சாராதார் கடவுளை அடையார்
வஞ்சமுடன் ஒருவன் வைத்தநிதி கவரத்
துஞ்சினனோ போயினனோ சொல்?
67 அருள் ஆன்மாவை வசப்படுத்தல்
தனக்கு நிழல்இன்றா ஒளிகவரும் தம்பம்
எனக் கவரநில்லாது இருள்.
68 அருளை முன்னிட்டு அதற்குப் பின்னே ஆன்மா நிற்றல் வேண்டும்
உற்கைதரும் பொற்கை உடையவர்போல் உண்மைப்பின்
நிற்க அருளார் நிலை.
69 அருளுக்கு முன்னே நிற்கும்போது சிவத்தைக் காணாமைக்கு ஏது
ஐம்புலனால் தாம்கண்டு அகன்றால் அதுஒழிய
ஐம்புலனார் தாம்ஆர் அதற்கு.
70 இதுவுமது
தாமேதரும் அவரைத் தம்வலியினாற் கருதல்
ஆமேஇவன் ஆர் அதற்கு.
  1. ஐந்தெழுத்து அருள் நிலை
71 பேரின்பத்தைப் பெறுவோரும் பெறாதோரும்
இன்புறுவார் துன்பார் இருளின் எழும்சுடரின்
பின்புகுவார் முன்புகுவார் பின்.
72 இன்பத்துக்குச் சிவானுபவம் வேண்டும்
இருவர் மடந்தையருக்கு என்பயன் இன்புண்டாம்
ஒருவன் ஒருத்தி உறின்.
73 அத்துவிதக் கலப்பால் பேரின்பத்தைப் பெறுவது ஆன்மாவே, சிவம் பெறுவதில்லை
இன்பதனை எய்துவார்க்கு ஈயும்அவர்க்கு உருவம்
இன்பகனம் ஆதலினால் இல்.
74 முத்திநிலை அத்துவிதம் என்பது
தாடலைபோல் கூடியவை தான்நிகழா வேற்றின்பக்
கூடலைநீ யோகம்எனக் கொள்.
75 முத்திநிலையை அத்துவிதம் என்றற்குக் காரணம்
ஒன்றாலும் ஒன்றாது இரண்டாலும் ஓசையெழாது
என்றால் ஒன்றுஅன்று இரண்டும்இல்.
76 இனிப் பிறவி யெடாதார் வகை
உற்றாரும் பெற்றாரும் ஓவாது உரைஒழியப்
பற்றாரும் அற்றார் பவம்.
77 சமாதிநிலை பலிதமாகும் முறைமை
பேய்ஒன்றும் தன்மை பிறக்கும் அளவுமே
நீயொன்றும் செய்யாமல் நில்.
78 சமய ஆசாரங்களும், அவைநீங்கும் முறைமையும்
ஒண்பொருட்கண் உற்றார்க்கு உறுபயனே அல்லாது
கண்படுப்போர் கைப்பொருள்போல் காண்.
79 முத்தியின்பம் இப்படிப்பட்டது என்று சொல்லத்தக்கது அன்று
மூன்றாய தன்மைஅவர் தம்மின் மிகமுயங்கித்
தோன்றாத இன்பம்அது என்சொல்.
80 சீவன்முத்தி நிலை பேரன்பினால் அடையத்தக்கது
இன்பில் இனிதென்றல் இன்புஉண்டேல் இன்றுஉண்டாம்
அன்பு நிலையே அது.
  1. ஐந்தெழுத்து அருள் நிலை
81 வேத ஆகமங்களில் உள்ள உண்மைகள் ஐந்தெழுத்தில் அடங்கியன
அருள்நூலும் ஆரணமும் அல்லாதும் ஐந்தின்
பொருள்நூல் தெரியப் புகும்.
82 பிரணவத்துள் அடங்கும் பொருள்கள்
இறைசத்தி பாசம் எழில்மாயை ஆவி
உறநிற்கும் ஓங்காரத்து உள்.
83 ஐந்தெழுத்துள் அடங்கும் பொருள்கள்
ஊன நடனம் ஒருபால் ஒருபாலாம்
ஞானநடம் தான்நடுவே நாடு.
84 ஆன்மாவின் பெத்தநிலையும் முத்திநிலையும் ஐந்தெழுத்தில் அடங்குதல்
விரியம நமேவியவ்வை மீளவிடா சித்தம்
பெரியவினை தீரப் பெறும்.
85 நகாராதி பஞ்சாட்சரம் உபாய மார்க்கர்க்கு உரியது
மாலார் திரோதம் மலம்முதலா மாறுமோ
மேல்ஆசு மீளா விடின்.
86 நகாராதி பஞ்சாட்சரம் மோட்ச ஆசையுடையார் ஒதல்ஆகாது
ஆராதி ஆதாரம் அந்தோ அதுமீண்டு
பாராது மேல்ஓதும் பற்று.
87 சிகாராதி பஞ்சாட்சரமே மோட்ச ஆசையுடையார்க் குரியது
சிவமுதலே ஆமாறு சேருமேல் தீரும்
பவம்இது நீஓதும் படி.
88 வகாரம் ஆன்மாவைச் சிவமாக்குதல்
வாசிஅருளி அதைவாழ்விக்கும் மற்று அதுவே
ஆசுஇல் உருவமும்ஆம் அங்கு.
89 முத்திநிலையை விளக்கும் ஐந்தெழுத்து
ஆசுஇல்நவா நாப்பண் அடையாது அருளினால்
வாசிஇடை நிற்கை வழக்கு.
90 சாதனங்களுக்கு உயிராயுள்ளது திருவருள்
எல்லா வகையும் இயம்பும் இவன்அகன்று
நில்லா வகையை நினைந்து.
  1. அணைந்தோர் தன்மை
91 சீவன்முத்தர் நிலை
ஓங்குஉணர்வினுள் அடங்கி உள்ளத்துள் இன்புஒடுங்கத்
தூங்குவர் மற்றுஏதுஉண்டு? சொல்.
92 இவர் பதியைப்போல் ஐந்தொழிலும் பசுக்களைப்போல் வினேகளேனும் செய்யார்
ஐந்தொழிலும் காரணர்களாம் தொழிலும் போகநுகர்
வெந்தொழிலும் மேவார் மிக.
93 முத்தர் எங்கும் சிவத்தையே காண்பவர்
எல்லாம்அறியும் அறிவுஉறினும் இங்குஇவர் ஒன்று
அல்லாது அறியார் அற.
94 அவர் விடயங்களைக் காணாமைக்குக் காரணம்
புலன்அடக்கித் தம்முதல்கண் புக்குறுவர் போதார்
தலம்நடக்கும் ஆமை தக.
95 அவர் சர்வ வியாபகர்
அவனைஅகன்று எங்குஇன்றாம் ஆங்குஅவனாம் எங்கும்
இவனைஒழிந்து உண்டாதல் இல்.
96 அவருக்கு விருப்பு வெறுப்பில்லை
உள்ளும் புறம்பும் ஒருதன்மைக் காட்சியருக்கு
எள்ளும் திறம்ஏதும் இல்.
97 அவரது வினையின் பயன் சிவாநந்தம்
உறும்தொழிற்குத் தக்கபயன் உலகம் தத்தம்
வறும்தொழிற்கு வாய்மை பயன்.
98 அவருக்குக் கன்மந் தீரும் முறைமை
ஏன்றவினை உடலோடுஏகும் இடையேறும் வினை
தோன்றில் அருளே சுடும்.
99 சீவன்முத்தர் நிலை பரமுத்தி
மும்மைதரும் வினைகள் மூளாவாம் மூதறிவார்க்கு
அம்மையும் இம்மையே ஆம்.
100 அவர் பெத்த ஆன்மாக்களில் அருளுடையவர்
கள்ளத் தலைவர் துயர்கருதித் தம்கருணை
வெள்ளத்து அலைவர் மிக.

About

No description, website, or topics provided.

Resources

Stars

Watchers

Forks

Releases

No releases published

Packages

No packages published

Contributors 3

  •  
  •  
  •